17 Nov 2016

சகஜ நிலை திரும்பியது


சகஜ நிலை திரும்பியது
நான்கு நாள்களாக நடுங்கிக் கொண்டிருந்த குமார், மனைவி மாற்றிக் கொண்டு வந்து கொடுத்து ரெண்டாயிரம் நோட்டை எடுத்துக் கொண்டு உற்சாகமாக நடந்து கொண்டிருந்தான் டாஸ்மாக்கை நோக்கி.
*****
விரக்தி
எந்த கோடீஸ்வரனும் விரலில் மை வைத்து ரூபாய் நோட்டு மாற்றவில்லை என்பதை அறிந்து கை விரலில்வைத்திருந்த கரும்புள்ளியைப் பார்த்தபடியே விரக்தியோடு நடந்தான் மிடில் கிளாஸ் மாதவன்.
*****
அவசர அழைப்பு
முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த அப்பாவையும், அம்மாவையும் அழைத்து வந்தான் அகிலன் அவர்கள் அக்கெளண்டில் ஆளுக்கு ரெண்டரை லட்சம் போட!
*****
கருப்பு
கை விரலில் பேனாவின் கருப்பு மை பட்டதும் பதறிப் போனான், பேங்கிற்கு ரூபாய் நோட்டு மாற்றப் புறப்பட்டுக் கொண்டிருந்த கதிர்.
*****
ப்ளாஷ்பேக்
பணம் மாற்றியதற்காக கை விரலில் கருப்பு மை வைக்கப்பட்டதும், ஒரு கணம் யோசித்துப் பார்த்தார் நாகப்பன், எந்தத் தேர்தலிலும் வரிசையில் நின்று விரலில் மை வைத்து ஓட்டுப் போடாமல் இருந்த தன் கடந்த காலத்தை.
*****
வேற மிஷின்
ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டவுடன், இனிமே வேற பிரிண்டிங் மெஷின்தான் வாங்க வேண்டும் என்று அலுத்துக் கொண்டான் கள்ளநோட்டு அடிக்கும் கரண்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...