25 Nov 2016

ஒத்துழையாமை இயக்கம்


ஒத்துழையாமை இயக்கம்
குறுஞ்செய்தி எதற்கும்
பதிலளிக்காமல்
செல்பேசியை
ஸ்விட்ச் ஆப் செய்யாமல்
இருப்பதிலிருந்தே புரிகிறது
எனக்கெதிராக நீ
துவங்கியிருக்கும்
ஒத்துழையாமை இயக்கம்!
*****

இருக்கலாம்
போதையில் தள்ளாடும்
அந்த மனிதன்
ஒரு தகப்பனாகவும் இருக்கலாம்,
அவனாலே அவன் குடும்பம்
அவனைப் போல
தள்ளாடிக் கொண்டும் இருக்கலாம்!
*****

நீயும் ஒரு புத்தன்
விரும்பிய வாழ்வை
சமரசம் இல்லாமல்
வாழ்ந்தால்
நாளை
நீயும் ஒரு புத்தன்தான்!
என்ன ஒரு நிபந்தனை
அந்த விருப்பத்தைத்
துறக்க வேண்டும் நீ!
*****

இணைப்புகள்
பார்க்கணும் போலிருக்கு
என்ற ஒரு
குறுஞ்செய்தி
இணைத்து விடுகிறது
சிறுகோபத்தால் உண்டான
பெரும் பிரிவை!
*****

என்றாள் மகள்!
"மருந்து கொல்லுமா?"
என்றாள் மகள்.
"இல்லடா செல்லம்!"
என்றேன்.
"அப்புறம் ஏம்பா கொல்லது பூச்சி மருந்து?"
என்றாள் மகள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...