24 Nov 2016

பணமிருப்பவர்கள் படம் காட்டலாம்


பணமிருப்பவர்கள் படம் காட்டலாம்
மற்றவர்கள் படம் பார்க்கலாம்
பணமிருந்தால்
பெண் தோழிகள் வைத்துக் கொள்ளலாம்
நாடெங்கும் சுற்றலாம்
சொகுசு பைக்கில் உலா வரலாம்
கைதாகினும்
முதல் வகுப்புச் சிறையில்
நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்
அஃதன்றி,
நம்மைப் போல்
நாட்டில் இருந்து கொண்டு
செல்லாத பணம் மாற்றி
பணமிருக்கும் ஏ.டி.எம்.மிற்காக
தேடல் வேட்டை நிகழ்த்தி
பயணங்களைக் குறைத்துக் கொண்டு
செலவுகளைச் சுருக்கிக் கொண்டு
வீட்டுக்குள் கைதியாய்
முடங்கிக் கிடக்க வேண்டியதில்லை
*****

அடகு
கடைசியாக
வேறு வழியின்றி
2000 நோட்டை அடகு வைத்தேன்
15 நூறு ரூபாய் நோட்டுகள் கிடைத்தன
*****

புத்திசாலிகள்
இப்படியெல்லாம்
ஆகும் என்று தெரிந்துதான்
லலித்மோடிக்களும்
மல்லையாக்களும்
வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர்
இந்த விவசாயிதான் பாவம்
சொந்த நாட்டிலே விவசாயம் செய்து
சொந்த நாட்டிலே
தூக்கு மாட்டிக் கொள்கிறார்
செத்துப் போவதிலும் ஒரு சுதேசியாய்!
*****

ஓங்கி அடிச்சா ஒரு மில்லி கிராம் வெயிட்
"வர்ற கோபத்துக்கு
.டி.எம்.மை ஓங்கி அடிச்சிடுவேன்னு
பயமா இருக்கு டாக்டர்!"
என்று போனால்,
"நூறு ரூபா நோட்டாத்தானே
பீஸ் கொண்டு வந்திருக்கீங்க?"
என்கிறார்
நலம் நாடும் மருத்துவர்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...