14 Nov 2016

சில ஐயப்பாடுகளும், சில ஐடியாக்களும்


சில ஐயப்பாடுகளும், சில ஐடியாக்களும்
வெளியான மறுநாளே
இரண்டாயிரம் நோட்டுக்கு
கள்ள நோட்டு அடிக்கிறார்களே,
அவர்களின் அறிவாற்றலை
நாட்டின் வளர்ச்சிக்கு
எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?
*****
கமல் எப்போதும்
ஆசம்தான்,
மூன்றாவது பிரேக் அப்பையும்
பேச வைத்து விட்டார்!
*****
சென்னைக்கு இரண்டு முகம்
ஒன்று
உயரமான எல்..சி. கட்டிடம்
மற்றொன்று
இடிந்துப் போன
மவுலிவாக்கம் கட்டிடம்
*****
டெல்டா மாவட்டங்களில்
நடக்கும்
விவசாயிகளின் தற்கொலைகளைத்
தடுக்க வேண்டும்!
என்ன செய்வது?
முதற்கட்டமாக
அவர்கள் விவசாயம் செய்வதைத்
தடை செய்ய வேண்டும்!
*****
காலையிலிருந்து மதியம் வரை
நின்றால்
நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு
எழுதி வாங்கிக் கொண்டு
இரண்டு இரண்டாயிரம் நோட்டு
தருகிறார்கள்!
மதியத்திலிருந்து மாலை வரை
நின்றால்
இரண்டு இரண்டாயிரம் நோட்டுக்கு
நாற்பது நூறு ரூபாய் நோட்டுகளை
சேஞ்சாகத் தருகிறார்கள்
மொத்தத்தில்
செல்லா ஐநூறையும், ஆயிரத்தையும்
செல்லும் இரண்டாயிரமாக மாற்ற
அரைநாள்!
செல்லும் இரண்டாயிரத்துக்கு
சேஞ்ச மாற்ற முடியாமல்
மறுபடியும் வங்கிக்கே சென்று
சேஞ்ச் மாற்ற
அரைநாள்!
ஒரு முழுநாள் பொழுதும்
இப்படியே முடிந்து விடுகிறது
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில்!
வாழ்க்கையில் நல்ல மாற்றம்!
*****
ஆயிரமும்
ஐநூறும்
இரண்டாயிரமும்
நூறுகளின் முன்
அடிபணியும் காலம்
இது என்பதால்
இனி நூற்றுக்கு நூறு என்பதை
இப்படியும் சொல்லலாம்
நூறுக்கு ஐநூறு
ஆயிரத்துக்கு ஐநூறு
இரண்டாயிரத்துக்கு ஐநூறு
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...