"கோடி" திரைப்பார்வை
கொடி திரைப்படத்திலிருந்து
பல கருத்துகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியதாகிறது. அவைகளாவன,
நாட்டில் மண்ணெண்ணெய் கையிருப்பு
அதிகமாக இருக்கும் போது, அரசியல் கட்சியின் தொண்டர்கள் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். நான்கு தொண்டர்களையாவது மனரீதியாக தீக்குளிக்க
தயார் செய்து விடுவார்கள் தலைவர்கள்.
தலைவன் (தலைவன்=கணவன், இலக்கியத்தில் கணவனை
அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) இருக்கும் போது தலைவி
(தலைவி=மனைவி, இலக்கியத்தில்
மனைவியை அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) தீக்குளிப்பது சதி
(உடன்கட்டை ஏறுதல்) என்றால், தலைவன் (தலைவன் = மக்கள் கூட்டத்திற்குத்
தலைவன், நிகழ்காலத்தில் அரசியல் கட்சித் தலைவர்களை அப்படித்தான்
குறிப்பிடுகிறார்கள்) இருக்கும் போது தொண்டன் தீக்குளிப்பது
மாபெரும் சதி (சதித்திட்டம் என்று சொல்கிறார்களே, அந்த சதி). அதுதான் காலம் காலமாகத் தொடரும் அப்பாவித்
தொண்டர்களின் தலைவிதி.
ஒரே குடும்பத்திலிருந்து
இரண்டு பேர் அரசியிலுக்கு வரக் கூடாது. ஒருவர் இறந்த பின்னே மற்றொருவர்
வர வேண்டும்.
அரசியல் என்றாலே டபுள் ஆக்ட்
என்பதை, இப்படித்தில் டபுள் ஆக்டில் நடித்ததன் மூலம் குறியீடாகச்
சொல்ல முயல்கிறார் தனுஷ்.
சூப்பர் ஸ்டார் நடித்த
"கொடி பறக்குது" திரைப்படத்தில் டபுள்
ஆக்ட் காட்டியிருப்பார் ரஜினிகாந்த். அங்கிருந்து உருவாகியிருக்கக்
கூடும் இப்படத்தின் ஒன்லைன்.
*****
No comments:
Post a Comment