15 Nov 2016

உருண்டோடும் காதல்


உருண்டோடும் காதல்
அன்பான தோழி மீது
கொண்ட காதல்
உருண்டோடுகிறது
தாமரை இலை
தண்ணீர் போல!
*****

பெயர் சொல்லி
எல்லாம் தெரிந்த கடவுளிடம்
நம் பெயர் சொல்லி
அர்ச்சனை செய்கிறார்
பூசாரி!
*****

ஆகி...
எல்லாரும்
டாக்டராகி
கலெக்டராகி
நல்லது செய்வார்களாக!
நாம்
விவசாயிகளாகி
பட்டினிக் கிடப்போமாக!
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...