20 Nov 2016

காதல் பூக்கள்


காதல் சொல்லும் பொய்கள்
உன் அடுக்கடுக்கான
பொய்கள்தான்
சொன்னது
என் மீதான
உன் காதலை!
*****

காதல் பூக்கள்
சப்பாத்தியும் கள்ளியும்
பூத்துக் கிடக்கும்
நிலம் வெடித்தப் பூமியில்
காதல் பூத்துக் கிடக்கிறது
ஆடு திருடி விற்கும்
அவளுக்கும்
காட்டுப்பூனைப் பிடித்து
கறிசோறு படைக்கும்
அவனுக்கும்!
*****

தேடல்கள்
கண் மையில்
காதலின் குறிப்புகளைப் பார்ப்பவனுக்கு
உதட்டுச் சாயங்களில்
காமத்தின் குறிப்புகளைப் பார்ப்பவனுக்கு
பெண் மனதின் ஆழங்கள்
புரிவதில்லை.
எப்போதும் பையில்
ஆணுறையோடு அலையும்
அவனுக்கு
ஒருத்தியை முடித்து விட்டால்
இன்னொருத்தியைத் தேடலாம்
என்ற அவசரம்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...