21 Nov 2016

ஏ.டி.எம்.மில் சிலந்தி வலை


.டி.எம்.மில் சிலந்தி வலை
ஒரு முறை
இரு முறை
சில முறைகளில்
மனம் தளர்ந்து
பணம் எடுக்க முடியாமல்
தோல்வி மனப்பான்மையில்
திரும்பிப் போனவனைத்
தூக்கி நிறுத்தியது
அடுத்தடுத்து வலை பின்னி
அறுந்து விழுந்த போதிலும்
விடா முயற்சியுடன்
.டி.எம்.மில் வலை பின்னிய சிலந்தி!
*****
சமத்துச் சம்புலிங்கத்தின் சமூகப் பார்வைகளில் சில
            1) .டி.எம். கொள்ளையர்கள் பாவம்!
            .டி.எம்.மில் பணம் நிரப்பாததால் வேலையிழந்து தவிக்கின்றனர்.
            2) சீக்கிரம் வந்தால் வேலையை ஆரம்பிக்கலாம் என்கிறான்
            ஐநூறு ரூபாய் கள்ளநோட்டு தயாரிக்க முடியாமல் தவிக்கும் தோஸ்த்து.
            3) பணம் இல்லாவிட்டால் என்ன?
            நாணயங்களை நிரப்பினால் எடுத்துக் கொள்ள மாட்டோமா ஏ.டி.எம்.களில்!
            4) நூறு ரூபாய் நோட்டுக்கே சில்லரை மறுக்கும் பேருந்து நடத்துநர்
            ரெண்டாயிரம் நோட்டைப் பார்த்ததும் பேருந்தை விட்டு இறக்கி விடுகிறார்.
            பழைய ஐநூறு, ஆயிரம் இருந்த போது இப்படி நேர்ந்ததில்லை, இறங்கும்
போது வாங்கிக் கொள்ளுங்கள் என்பார் அவர், எப்படியும் சில்லரை கேட்க மறந்து விட்டு இறங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில்! இந்த இரண்டாயிரம் நோட்டு நினைவாற்றலை அதிகரித்த விட்டது.
            5) எனது அக்கெளண்டில் போட்டுப் பணம் மாற்றித் தர முடியுமா என்கிறார்
            நான் கேட்கும் போது கடன் கொடுக்க மறுத்த நண்பர் ஒருவர். தீமைக்கும்
            நன்மை செய்ய விரும்பி அவர் கொடுத்த பணத்தை வாங்கிச் செலுத்தினேன்      
என் லோன் அக்கெளண்டில்.
            6) கண்டெய்னர் லாரிகளில் பணம் வைத்திருப்பவர்கள் எந்த வங்கியின் எந்த   கிளையின் எந்த வரிசைகளில் நிற்பார்கள்?
            7) நல்ல வேளை நூறு ரூபாய் நோட்டையும் செல்லாது என அறிவிக்காமல்       போனார்கள்! இல்லையென்றால் கிழிந்து தொங்கும் ஐந்து ரூபாய்            
நோட்டுக்கும், பத்து ரூபாய் நோட்டுக்கும் நாயாய் பேயாய் அலைய வேண்டி         வந்திருக்கும்.
8) சில்லரை பிரச்சனை தீர இப்போது இருக்கும் நிலையில் ஒரு எளிய யோசனை          - பிச்சைக்காரன் திரைப்பட விஜய் ஆண்டனி போல் ஒரு மண்டலம் (48 நாட்கள்) பிச்சைக்காரனாய் இருந்துப் பார்த்தால் என்ன? இப்படி ஒரு நிலை           
வரக்கூடும் என்று சிந்தித்த தீர்க்கதரிசியான அன்னாரை எண்ணி எண்ணி          மயிர்கூச்செரிகிறது எந்தன் மேனி.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...