பிம்பிளிக்கா
ப்ளாக்கி
நல்ல வேளை
விஜய் மல்லைய்யா
கடனை வாங்கி
விட்டு
நீங்கள்
வெளிநாட்டுக்குப் போய்
வங்கிகளை
அலைக்கலைத்து
விட்டீர்கள்!
இந்த நாட்டின்
அப்பாவி சுப்பையாக்கள்
கடனை முறையாக
செலுத்தி
விட்டு
வங்கிக்கு
வங்கிக்கு
அலைந்து
கொண்டிருக்கிறார்கள்
ரூபாய் நோட்டுகளை
மாற்ற!
*****
பண்டமாற்றுக்கு
மாற்றாகத்தானே
பணம் வந்தது!
இங்கே பணத்திற்கு
மாற்றாக பணமே
எப்படி வந்தது?!
*****
எந்தப் பணமும்
நல்ல பணம்தான்
ரிசர்வ்
பேங்கிலே அச்சடிப்பதிலே!
அது நல்லப்
பணமாவதும்
கள்ளப் பணமாவதும்
அவரவர் பிரிண்டரில்
அச்சடிப்பதாலே!
*****
ரெண்டரை
லட்சத்திற்கு மேல்
உள்ள தொகையிலிருந்து
தப்பிக்க
ஒரு வழிதான்
உண்டு.
அது,
ரெண்டரை
லட்சத்திற்குக் குறைவாக
சுமார் 650 கோடிக்கு திருமணம் செய்தால்
எஸ்கேப்பு,
இல்லேன்னா
ஆம்புலன்ஸில்தான்
வரும் ஆப்பு!
*****
தேறேன் கொல்
தெளியேன்
கொல்
இளஞ்சிவப்பு
நிற
இரண்டாயிரத்தால்
கருப்புப்
பணம் ஒழியும்
அதே நேரத்தில்
மைல்ட் கருப்பான
சாம்பல்
நிற
ஐநூறு ரூபாய்
கொஞ்சம்
டார்க்காகி
கருப்புப்
பணமாகி விடுமோ
என்ற மைல்ட்
டவுட்டை
யாது செய்வேன்
கொல்?
*****
சமத்துச் சம்புலிங்கத்தின் சிந்தனைச் சிதறல்களில் சில
1) ரூபாய் நோட்டு பிரச்சனையாக
இருப்பதால் டாலருக்கு மாறலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
2) பேங்க் அக்கெளண்ட் இருப்பவர்களிடமெல்லாம்
இரண்டரை லட்ச ரூபாய் இருக்காது.
3) இரண்டரை லட்ச ரூபாய்க்கு
மேல் பணம் உள்ளவர்கள் புனைப்பெயரில் ஒரு அக்கெளண்ட் ஆரம்பித்து அதில் மேற்பட்ட தொகையை
டெபாசிட் செய்க.
4) நல்லவனிடமும் கள்ளப்
பணம் வருவதுண்டு. கள்வனிடமும் நல்லப் பணம் போவதுண்டு.
5) எல்லா ஐநூறு,
ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு விட்டால்,
தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு 4016 ஆம் ஆண்டில்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வெளியான ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல்
போக வாய்ப்புண்டு.
6) ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்ற அறிவிப்பு மீண்டும் வெளியாகலாம் என்ற அச்சத்தின் காரணமாக, இன்றிலிருந்து வாழ்நாள் முழுமையும் நாணயங்களை மட்டுமே பயன்படுத்துவதாக இருக்கிறேன்.
7) கடன்காரர்கள் தயவுசெய்து
சில்லரையாக கொடுக்கவும். மக்கள் வட்டிக் கட்டுவதை விட சில்லரை
மாற்ற ரொம்பவே சிரமப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment