22 Nov 2016

அழைப்பு


அழைப்பு
பிறவிப் பெருங்கடல் நீந்த
கால் பிடித்து
அழைத்துப் பார்க்கின்றன
கடல் அலைகள்!
*****

நீர்வழி
இலையாய் விழுந்தால்
இழுத்துச் செல்லும்
ஆறு.
*****

வீடு
இரவு சொல்லும்
ஒரு மரம் என்பது
எத்தனை பறவைகளின்
வீடு என்பதை!
*****

பசி நிரப்புதல்
எல்லாரும்
திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து
தனக்குக் கூட
மீதமில்லாமல் போகும் போது
நன்றாகத்தான் சமைத்திருக்கிறோம்
என்ற
மனநிறைவில்
நிரப்பிக் கொள்கிறாள்
அம்மா தன் பசியை!
*****

வருகை
அனைத்து அமைச்சர்களும்
வருவதற்கேனும்
ஒவ்வொரு தொகுதிக்கும்
ஒருமுறையேனும்
நடக்க வேண்டும்
இடைத்தேர்தல்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...