23 Nov 2016

வாசம்


வாசம்
நாறிய மீனில்
இருக்கிறது
கருவாட்டுக் குழம்பின் வாசம்!
*****

விரிசலைத் தைக்கும் வேர்
ஒரே ஒரு தடவை...
எனும் குறுஞ்செய்தியிலிருந்து
பிரிவால் விழுந்த
இதயத்தின் விரிசலைத்
தைத்தபடி
வேர்விடத் துவங்கிறது
மறுபடியும் நம் காதல்!
*****

சாத்தியங்கள்
வேறென்ன வேண்டும் என்ற
குறுஞ்செய்திக்கு
நீதான் வேண்டும் என்ற
குறுஞ்செய்தி
சாத்தியமாக்கிப் போகிறது
இணைவையோ அல்லது
பிரிவையோ
சமய சந்தர்ப்பங்களைப் பொருத்து!
*****

அடுப்பில் எரியும் பிணம்
அடுப்பில் எரிகிறது
பிணமாக
செத்துப் போன மரம்!
*****

மருந்துகள்
மனுசனுக்கும்
மருந்து
பூச்சிக்கும்
மருந்து
பூச்சி மருந்து!
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...