15 Nov 2016

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை ரசிகர் உடைமையடா


அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை ரசிகர் உடைமையடா
காத்திருக்கும் பொறுமை இல்லாத
கெளதம் மேனன் கதாநாயகர்கள்
துப்பாக்கியை எடுத்து
டொப் டொப் என்று சுட்டுக் கொண்டு இருப்பார்கள்.

ஒரு பெண் மேலான ஆழமான அன்பை
துப்பாக்கியால் சுட்டு
கத்தியால் குத்தி
நிரூபிக்கிறார்கள்
அவர்கள் ஆழமான காதலர்கள்

மென்மையான காதலையும்
வன்முறைப் புனைவுகளையும்
கலந்து, புரட்டி, வறுத்து எடுத்தால்
நீங்கள் அந்த திரைக்கதையை
எழுதி விடலாம்.

நிச்சயம் இந்தப் படங்களில்
சைக்கோ தனமான ஒரு லீட் இருக்கும்
நாம் அதை ரசிப்போம் என்று
சம்பந்தப்பட்ட அவர்கள்
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
இன்னும் காசைக் கொட்டி கரியாக்குவதற்கும்
படங்களாய்ச் சுட்டுத் தள்ளுவதற்கும்!
*****

Please visit and share www.vikatabharathi.blogspot.com

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...