16 Nov 2016

அடம்


அடம்
மிச்சம் மீதமிருந்த காசில் மகன் ஆசையாய்க் கேட்ட பீட்சாவை வாங்கி வந்த பின், அடம் பிடித்தான் மகன், "எனக்கு ஊத்தப்பம்தான் வேணும்!"
*****

அருள் வாக்கு
கைதான் சாமியார்ஜெயிலருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் அருள் வாக்கு!
*****

பலி
கிரானைட் குவாரி வெட்ட அனுமதி கிடைத்ததும், ஆட்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் நரேன் நரபலி கொடுக்க!
*****

செயல்
சுத்தம், சுகாதாரம் பற்றி நீண்ட நேரம் பேசி விட்ட வந்தவர்களுக்கு காபி போட, பால் பாக்கெட்டைப் பல்லால் கடித்துப் பிய்த்தாள் நந்தினி.
*****

குடி
குடிகார கணவன் கருணாவைச் சமாளிக்க முடியாத விரக்தியில் குடிக்க ஆரம்பித்தாள் லலிதா.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...