23 Nov 2016

கடவுள் இருக்கான் குமாரு


கடவுள் இருக்கான் குமாரு
சப் டைட்டில் - கடவுள் இல்லடா குமாரு
            ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு கொடுக்காத பக்கத்து வீட்டுக்காரன் ஆயிரம் ரூபாய் நோட்டை வெச்சுகிட்டு பணம் மாத்த முடியாம அலைஞ்சப்பதான் புரிந்து கொண்டேன், "கடவுள் இருக்கான் குமாரு!"
            ஆனா பாருங்கள் நட்புகளே! கஷ்டப்பட்டு ஆயிரத்தை மாத்திகிட்டு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் "கடவுள் இருக்கான் குமாரு!" படத்தைப் பார்க்கப் போன போதுதான் புரிந்து கொண்டேன் "கடவுள் இல்லடா குமாரு!"
            இந்த படத்தில் பேச்சுலர் பார்ட்டிக்காக நாயகன் சரக்கு அடிக்கிறதுக்காக பாண்டிச்சேரி கிளம்பிப் போகிறான். அதான், தமிழ்நாட்டுலேயே ஆயிரத்தெட்டு டாஸ்மாக் ஆலயங்கள் இருக்கின்ற போது, எதுக்கு தண்ணி அடிக்கிறதுக்குன்னு பாண்டிச்சேரிக்கு கிளம்பிப் போறானுங்க என்பதுதான் புரியாத புதிரா இருக்கு? அடிக்கிற சரக்குக்கு டேக்ஸ் குறையும்னு நினைக்கிற இவனுங்களாலதான் கருப்புப் பணம் நாட்டுல பெருகுது.
            இரண்டு நாயகிகள் உள்ள இந்தப் படத்தில், இரண்டு அர்த்த வசனங்களும் உண்டு. ஆக, இந்த படத்தின் மூலம் டபுள் புரமோஷன் அடிக்க நினைத்திருக்கிறார் நாயகன். பார்க்கப் போன நமக்குதான் டபுள் டீ புரோமேசன்! என்னமோ போடா மாதவா!
            இந்தப் படத்தில் கெட்ட வார்த்தைகளை நாசுக்காகச் சொல்ல முயலும் ஒரு பண்பாட்டு முயற்சியும் அரங்கேறியிருக்கிறது. பக்கத்துல உட்கார்ந்து படம் பார்க்குற நம்ம பசங்க அதை அப்படியே அடிச்சு விடுறாங்கப்பா டப்ஷ்மாஸ் பண்ற மாதிரி. நம்ம வாழ்க்கையில இனிமே நல்லது கெட்டதுன்னு எதுவும் இல்லன்னு நினைக்கிறவங்க, தாரளமா இந்தப் படத்தை ஒரு முறை பார்த்துட்டு வாங்க!
            இன்னொரு வகையில் இந்தப் படம் டாஸ்மாக் பார்களுக்கு எதிராகவும், பாண்டிச்சேரி பார்களுக்கு ஆதரவாகவும் இருப்பது போல ஓர் அரசியல் பார்வையையும் தருகிறது என்பதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டையும், பாண்டிச்சேரியையும் மோத விட்டுப் பார்த்திருக்கிறார்கள்.
இப்படத்தால் தீவிர ஆத்திகர்கள் தீவிர நாத்திகர்களாக ஆகக் கூடும்.
குமார்கள் கவலைப்பட வேண்டாம்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...