24 Nov 2016

சில்லரை


சில்லரை
கண்டக்டர் கேட்டபடி சில்லரைக் காசுகளாகக் கொடுத்தார் பஸ்ஸில் ஏறிய பிச்சைக்காரர்!
*****
பயம்
"இது என்1கே2 வைரஸ்! குணமாக்குறது கஷ்டம்!" என்றார் டாக்டர். "நல்லதாப் போச்சு! நீங்க வேற குணப்படுத்திடலாம்னு சொல்லி பணத்தைப் பிடுங்கிடுவீங்களோன்னு பயந்துட்டேன்!" என்றார் முத்தையா.
*****
அடுத்து
"குண்டுவெடிப்பில் 180 பேர் உடல் சிதறி..." செய்தி வாசித்துக் கொண்டு இருக்க, "தேங் காட்! இல்லேன்னா அடுத்த மனித வெடிகுண்டா நான் போகணும்!" பெருமூச்சு விட்டுக் கொண்டான் அவன்.
*****
வாக்கு
பத்து சொச்சம் வாக்குகளே விழுந்திருந்தன, நூறு சொச்சம் பேர்களோடு வேட்புமனு தாக்கல் செய்த ஏகாம்பரத்துக்கு.
*****
பரிதாபம்
"இப்படி நடக்க வெச்சு பிச்சை எடுக்க வைக்கிறான்களே மாபாவிகள்!" என்ற யானையைப் பார்த்து பரிதாபப்பட்டான், யானைக்கால் வந்த முருகேசன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...