16 Nov 2016

நாமாகவும், நமக்காவும்


காலம் சொல்லுதல்
சிறைபட்ட பின்னும்
எதிர்காலம் இருக்கிறது
எதிர்காலம் சொல்லும் கிளி!
*****

நாமாகவும், நமக்காவும்
நாமாகவும்
எதாவது செய்ய வேண்டியிருக்கிறது
நமக்காகவும்
யாராவது
எதாவது செய்ய வேண்டியிருக்கிறது
வாட்ஸ் அப்
பேஸ்புக்
டிவிட்டர்
இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்காக!
*****

பிரிய ஓவியங்கள்
பிடித்தமான
பூனைக்குட்டியையும்
நாய்க்குட்டியையும்
வரைந்த பிறகு
குழந்தைகள்
வரையத் தொடங்குகின்றனர்
குழந்தைகளின் படங்களை!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...