1 Dec 2016

பிக்சிங்


பிக்சிங்
"மேட்ச் பிக்சிங் நடந்திருக்குற மாதிரி தெரியுது!" என்றார் ரிப்போர்ட்டர் குப்தா. "நடக்கலன்னு நியூஸ் போடச் சொல்லி நாப்பது எல் வந்திடுச்சு!" என்றார் சீப் எடிட்டர் மிஸ்ரா.
*****
நிவாரணம்
வெள்ள நிவாரணம் வழங்கப்பட்ட பின், தன் வீட்டை இன்னும் இரண்டு மாடிகள் உயர்த்திக் கொண்டார் தலைவர்.
*****
படிப்பு
மேற்கொண்டு பணம் கட்டிப் படிக்க முடியாமல் படிப்பை பாதியிலே நிறுத்திக் கொண்டான் எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்த மகன் அஷ்வந்த்.
*****
ஒத்தடம்
பிரம்பால் அடித்த ஆசிரியர் வீடு திரும்பியதும், ஒத்தடம் கொடுத்துக் கொண்டார் தோள்பட்டைக்கும், முதுகுக்கும்.
*****
மூடு
"அப்பவே காபியை மூடி வைக்கச் சொன்னேனே!" என்று மனைவியைத் திட்டிய கோவிந்தராஜனுக்கு செல்பேசி அழைப்பு வந்தது. "சார்! நம்ம கிரெளண்ட்ல போட்டிருந்த ஆழ்துளை குழாய்ல குழந்தை ஒண்ணு தவறி விழுந்திடுச்சு!"
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...