19 Nov 2016

ரூ.4000 இல் 2000 இங்க இருக்கு! பாக்கி 2000 எங்கே?


ரூ.4000 இல் 2000 இங்க இருக்கு! பாக்கி 2000 எங்கே?
            (மேற்காணும் தலைப்புக்கும் கவுண்டமணி-செந்தில் வாழைப்பழஜோக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை அனைவரும் அறிவர்)
            கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை பழசாக இருப்பதாகவும், பழைய 500க்கும், 1000க்கும் நாலாயிரம் மாற்றலாம் என்ற அறிவிப்பு மாய்ந்து இரண்டாயிரம் ஆன கதை புதுசாகவும் இருப்பதாகவும் சமூகத்தில் ஒரு பேச்சு நிலவுகிறது.
            இப்படியே போனால் கட்டெறும்பும் தேய்ந்து அமீபா, பாரமீசியம் ரேஞ்சுக்குப் போனாலும் போய் விடும் என்ற விவாத ஆராய்ச்சிக்கும் நாட்டில் குறைவில்லை.       இதற்கு மேலும் இரண்டாயிரத்தைக் குறைத்து ஆயிரமாக எல்லாம் ஆக்கி விடாதீர்கள் ஆபிசர்ஸ் என்ற புலம்பல்கள் ஒரு புறம் கேட்க, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அப்புறம் அச்சடித்த ரெண்டாயிரத்தைக் கொடுக்கும் போது ரெண்டாகப் பிய்த்துதான் கொடுக்க நேரிடும் என்ற அக்கறையும் மக்களிடையே காணப்படுகிறது.
            இப்படியே ரூபாய் நோட்டு மாற்ற பரிமாற்றத்தைப் பாதிப்பாதியாகக் குறைத்துக் கொண்டே போனால்,
            யோசித்துப் பார்த்த போது,         
                                    4000 இல் பாதி 2000
                                    2000 இல் பாதி 1000
                                    1000 இல் பாதி 500
                        மேற்படி முறையில் மேலும் குறைத்துக் கொண்டே போனால்
                                    62.50,
                                    31.25,
                                    15.625
                                    7.8125
                                    3.40625
                                    1.703125
                                    0.8515625
            என்றெல்லாம் வருகிறது. இதையெல்லாம் எப்படிக் கொடுப்பார்கள்? அதற்கேற்றவாறு சில்லரைக் காசுகளை கற்பனைப் பண்ணிப் பார்த்தால் கொள்ளு தாத்தாக்கள், எள்ளுத் தாத்தாக்கள் காலத்து காலணா, அரையணா, எட்டணா எல்லாம் புழக்கத்தில் வந்து, பள்ளிகளில் கால் வாய்பாடு, இரை வாய்ப்பாடு, முக்கால் வாய்பாடு, காலே அரைக்கால் வாய்பாடு எல்லாம் பயிற்சிக்கு வந்து விடுமோ என்று அச்சமாகத்தான் இருக்கிறது.
            ஏற்கனவே கால்குலேட்டரும், கம்ப்யூட்டரும் வந்துவிட்டதால் பத்து வரை வாய்பாடுகள் படிக்கவே பிகு பண்ணும் பிள்ளைகள் கால்-அரை-முக்கால்-காலே அரைக்கால் வாய்பாடுகளையெல்லாம் படிப்பார்களா?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...