21 Nov 2016

தவறெனப்படுவது...


அதிகம்
அபார்ட்மெண்டில்
குடியிருப்பவர்களை விட
அதிகமாய்க் குடியிருக்கின்றன
பறவைகள்
ஒரு மரத்தில்!
*****

தயாரிப்புகள்
கையில் ரிமோட்டுடன்
சேனல் மாற்றி மாற்றி
பார்க்க மாட்டோம் என்றாலும்
பெரும் செலவு செய்து
தயாரிக்கப்பட்டு
ஒளிபரப்பப்பட்டுக் கொண்டுதான்
இருக்கின்றன
விளம்பரங்கள்!
*****

தவறெனப்படுவது...
தவறே இல்லை
தவறாகவேனும்
புரிந்து கொள்
என்னை!
*****

மரங்கள்
புத்தனுக்குப்
போதிமரம்!
தமிழனுக்குச்
செம்மரம்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...