11 Nov 2016

ஆயிரமும் ஐநூறும் செல்லாது போனால்...


ஆயிரமும் ஐநூறும் செல்லாது போனால்...
ஆயிரமும் ஐநூறும் செல்லாது என்று
அறிவித்த உடன்
அப்பாவின் சட்டைப் பையில்
கை வைப்பதை விட்டு விட்டு
ஆத்தாவின் சுருக்குப் பையில்
கை வைத்தேன்!
*****
ஐநூறு ரூபாய் பாக்கெட் மணி
வேண்டாம்
நூறு ரூபாய் பாக்கெட் மணியே
போதும்
என்று நல்ல பிள்ளையாக ஆனேன்!
*****
ஆயிரம் ஐநூறு மொய் வேண்டாம்
நூறு ரூபாய் மொய் போதும்
என்று சொன்ன
திருமண வீட்டினர்க்கு
நன்றி சொன்னேன்!
*****
வாங்கிய கடனுக்காக
அவமானப்படுத்திய நண்பர்களிடம்
அதைத் திருப்பிக் கொடுக்க
ஆயிரத்தோடும் ஐநூறோடும்
சென்ற போது,
"ஒண்ணும் அவசரமில்ல
மெதுவா திருப்பிக் கொடு மாப்பிள்ள!"
என்று சொன்னதை ரசித்தேன்!
*****
கணக்கு எழுத யோசித்துக்
காசை எடுத்து வை என்று
டீ குடித்த உடன் அதட்டும்
அண்ணாச்சி,
ஐநூறை நீட்டியதும்,
"கணக்குல எழுதிக்கிறேன்!"
என்று சொன்னதும்
"அப்படியே கணக்குல எழுதிக்கோங்க!"
என்று நாலு பஜ்ஜி
மூன்று போண்டா
இரண்டு சமோசா
எக்ஸ்ட்ரா எடுத்துக் கொண்டேன்!
*****
குட்டிப் பாப்பாவின்
உண்டியலை
ஆட்டையைப் போடும்
பாவத்திலிருந்து விடுபட்டு,
குட்டிப் பாப்பாவின்
அனுமதியோடு,
"மாமாகிட்ட சில்லரை இல்லை!"
என்று அவள் கண் முன்னே
போட்டு உடைத்து
சில்லரைகளையெல்லாம்
பொறுக்கிக் கொண்டேன்!
*****
அம்மா கொஞ்சம்
ஸ்பெஷல் என்பதால்
அவள் அனுமதிக் கேட்காமலே
கடுகு டப்பாவிலும்
சீரக டப்பாவிலும் இருந்த
பத்தையும், இருபதையும்
எடுத்துக் கொண்டேன்,
ஒருவேளை
அம்மா கண்டுபிடித்தால்
"வளர்ற புள்ளை
காலேஜ்லேர்ந்து பசியோடு
வர முடியுமா?"
என்ற சொல்வதற்கான டயலாக்கையும்
தயார் செய்து வைத்துக் கொண்டு!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...