1 Nov 2016

சாவின் மீதான் கருணை


சாவின் மீதான் கருணை
கள்ளச்சாராயச் சாவுகள்
செத்து விட்டன என்பதால்
டாஸ்மாக் சரக்குக் குடித்தே
சாவான்
சாவின் மீதான பெருங்கருணை
கொண்ட
தமிழன்!
*****

சமத்துவம்
100 கோடி படம்
5 கோடி படம்
2 கோடி படம்
அனைத்துப் படங்களையும்
சமத்துவமாகப் பார்க்கும்
30 ரூபாய் திருட்டு டிவிடி!
*****

நாற்காலிகள்
நாம் செல்லும் போது
பரபரப்பாக
சுழன்று கொண்டிருக்கும்
சலூன் நாற்காலிகள்
வேடிக்கைப் பார்க்கும் போது
வெறுமனே
சுழன்று கொண்டிருக்கும்!
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...