19 Nov 2016

ரெண்டாயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாMONEY


ரெண்டாயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாMONEY
            மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் மார்க்ஸ். இந்த ரூபாய் நோட்டு மாற்றும் மாற்றம் இன்னும் மாறவில்லை.
            இரண்டு கைகளாலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைப் பார்த்த போது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த பேப்பர் போல் தோன்றியது. இருந்தாலும் இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதாக சொல்கிறார்கள். நாம் பணம் மாற்றும் வங்கியில் காவலர்கள் இருப்பதால் இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ!
விசயம் இதுதான். நம் நாட்டு பணத்தை பாகிஸ்தான் அச்சடிக்க காட்டிய ஆர்வத்தால் வந்த வினை இது. அவர்கள் பாட்டுக்கு நம் நாட்டு பணத்தை கத்தைக் கத்தையாக அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்களாம். நம் தமிழ்த் திரையுலகில் பாகிஸ்தான் தீவிரவாகைளை வேட்டையாடும் ஹீரோக்களை அவிழ்த்து விட்டால்தான் அவர்கள் சரிபட்டு வருவார்கள்.
            இதில், இரண்டாயிரம் நோட்டிலும் கள்ளநோட்டு அடித்து விட்டதாக வந்த செய்தியைப் பார்த்த போது கையிலிருப்பது கள்ளநோட்டா, நல்ல நோட்டா என்று அவ்வபோது மனசாட்சி முன்னே வந்து குதித்து கேள்வி கேட்டு விட்டுப் போகிறது. இருந்தாலும் இந்த கள்ளநோட்டு கும்பல் இவ்வளவு பாஸ்டாகவும், ஆர்வ கோளாறாகவும் இருக்க கூடாது நண்பர்களே! மறுபடியும் புதிதாக வெளியிட்ட இரண்டாயிரம் நோட்டு செல்லாது என்று அறிவித்து விட்டால், மீண்டும் வரிசையில் நின்று மாற்றுவது என்பதெல்லாம் ஆகிற காரியமா சொல்லுங்கள்.
            இந்த ரெண்டாயிரம் நோட்டால் நேர்ந்த இன்னொரு பிரச்சனை என்னவென்றால், முன்பெல்லாம் நூறோ, ஐநூறோ கைமாற்றாகக் கொடு என்று கேட்டவர்கள், இப்போதெல்லாம் ஒரு ரெண்டாயிரம் கைமாற்றாக இருந்தா கொடு என்கிறார்கள்.
            வங்கியிலும், அஞ்சலகத்திலும் புதுப்பணம் தருகிறார்களாம் என்று செய்தி கேள்விபட்டுச் சென்ற நம் நண்பர் ஒருத்தர் போன வேகத்தில் திரும்பி வந்து விட்டார். என்ன விசயம் என்று கேட்ட போதுதான் அவர் சொன்னார், "பணம் கொடுத்தாத்தான் பணம் தருவாங்களாம்! நான் ஏதோ நிவாரணம் மாதிரி ஆளுக்கு நாலாயிரம் கொடுக்குறாங்களோன்னு நினைச்சுப் போயிட்டேன்!" என்றார்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...