12 Oct 2016

kavithai


வியாதிக்காரியும், வியாதிக்காரனும்
முகப்பருவிற்கு
ஒரு மருத்துவம் கேட்கிறாய்
காதலை மறைக்கும்
வியாதியை
வைத்துக் கொண்டு!
*****
தேவதையாய்ப் பிறந்த
உன்
முன்னழகில் தெரிகிறது
சிறகுகளின் அடையாளம்!
*****
நீ
ஒவ்வொரு அடி
எடுத்து வைக்கும் போது
பூமியில்
ஒரு
பூ உதிர்கிறது
உன் காலடித் தடமாய்!
*****
குறி சொல்ல மறுக்கும்
கிளிக்குத் தெரியும்
என் பர்ஸில் இருக்கும்
உன் புகைப்படம்!
*****
உன்
நிலா முகத்தைப்
பார்த்துக் கொண்டே
பகலிலும் சாப்பிடலாம்
நிலாச்சோறு!
*****
சொல்ல வந்த காதல்
தொண்டைக் குழியில்
சிக்கிக் கொள்ளும் போதுதான்
புரிகிறது
நஞ்சுண்ட சிவனின் வேதனை!
*****
ஓர் எண்ணுக்குள்
அடக்கி விடுகிறாய்
என்னை
உன் செல்பேசி எண்ணைக்
கொடுத்து!
*****
உன் கூந்தலுக்கு
மணமுண்டு!
முடி கோதிய
விரல் முழுவதும்
வாசம்!
*****
கரும்புள்ளி விழுந்து விட்ட
பூவொன்று
ஞாபகப்படுத்துகிறது
உன்
அழகான மச்சத்தை!
*****
உன் அழகான
கைரேகைகளைப்
பார்த்தபடியே
மறந்து விடுகிறேன்
மருதாணிப் போட வந்ததை!
*****
இதயநோய் என்றால்
மாரடைப்பு என்பவர்கள்
காதலித்து அறியாதவர்கள்!
*****
ஒன்று
இரண்டு
மூன்று என
பனிரெண்டு எண்ணுவதற்குள்
சிரித்து விடுகிறாய்
குறிஞ்சிப் பூப்போல!
*****
புதையல்கள்
தோண்டி எடுக்கும் போதெல்லாம்
அறிவேன்
அது
ஏதோ ஒரு பிறவியில்
புதையுண்ட
உன் உடல் என்பதை!
*****
தொடர்ந்து வாருங்கள் நெஞ்சங்களே!
தினம் தினம் கொண்டாடுவோம் கவிதைகளை!
உங்கள் மேலான கருத்துகளுக்காக
வலை தள வழி மேல் ,
இணையத் தொடர்பு எனும் விழி வைத்து காத்திருக்கிறேன்!


No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...