குறிப்புகள்
"பிடிக்கலேன்னா வேற மாத்திக்கோ!"
பில்லையும் கொடுத்து
ஆசையோடு வாங்கிச் சென்ற
புடவையையும் கொடுத்தார் அப்பா!
பிடிக்கவும் இல்லை,
மாற்றவும் போவதில்லை என்பதை
முகத்தைச் சுழித்த
ஒற்றைப் புன்னகையில்
காட்டி விட்டு வேலையைத் தொடர்ந்தாள்
அம்மா!
******
No comments:
Post a Comment