19 Oct 2016

கவிதை


கவிதை
"புரியுற மாதிரி கவிதை எழுதாதே!" என்றான் நவீன கவிஞன் ரக்ஷித விமலாதித்தன்.
"சரி உன் கவிதையைக் காட்டு!" என்றான் சற்குண பாண்டியன்.
ரக்ஷித விமாலித்தன் காட்டினான் தான் எழுதிய மரபுக் கவிதையை!
*****

மாற்றம்
"ஆபரேஷன் பண்ண நாலு லட்சம் ஆகும்!" என்றதும், "சரி போஸ்ட்மார்டமே பண்ணுங்க! பத்தாயிரத்துல முடிச்சிப்போம்!" என்றான் சண்முகம்.
*****

வீடு
கூடு கட்ட மரம் தேடி, மின் கம்பத்தில் கூடு கட்டிய குருவியை ஆதங்கத்தோடு பார்த்தான் நான்கு நாள்களாக வீடு தேடி அலையும் மாதவன்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...