19 Oct 2016

முயன்று, முயன்று...


முயன்று, முயன்று...  
உன்னைத் திருத்த
முயன்று
முயன்று
முயன்று
முயன்று
திருத்திக் கொண்டேன்
என்னை!
*****

சுற்று           
என்னையே
ஏன் சுற்றுகிறாய்
என்கிறாய்,
உன்னைச் சுற்றி
வட்டமானவன்
வேறென்ன
செய்ய முடியும்?!
*****

ஆகும்         
எதையும் இழக்கத் துணிந்த
காதல் கனியும்
சிறு துரும்பையும்
இழக்க மனமில்லாத
திருமணமாக!
*****

No comments:

Post a Comment