18 Oct 2016

இதுவும் கடந்து போகும்


பாடம்        
ஒரு தியான வகுப்பை
நடத்தி விடுகிறார்கள்
காகிதக் கோப்பையில்
அச்சிடப்பட்ட உருவங்களோடு
உரையாடியபடியே
தேநீர் பருகிக் கொண்டிருக்கும்
குழந்தைகள்!
*****

இதுவும் கடந்து போகும்    
ஆற்று மணலை
அமுக்கிக் கொண்டு
நாயொன்றை
நசுக்கி விட்டு
காவல் நிலையம் வழியே
குடிபோதையில்
தள்ளாடியபடிச் செல்லும்
லாரி ஒன்று!
*****

அம்மா       
அனைவரும்
திட்டும் போது
அம்மா
மட்டும்
பொழிவது
அன்பு!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...