22 Oct 2016

விழா


எட்டிப் பார்த்தல்         
காம்பெளண்ட் சுவர்கள்
மறைத்தாலும்
எட்டிப் பார்க்கத்தான் செய்கின்றன
குரோட்டன்ஸ் செடிகள்!
*****

விழா           
பகலில் அம்மன் பாட்டு
இரவில் குத்துப் பாட்டு
முடிந்து போகிறது
திருவிழா!
*****
           
விலை         
இயற்கையின் பரிசை
காசு கொடுத்து வாங்க வைப்பான்
கெட்டிக்கார மனிதன்
புட்டியில் அடைத்த
தண்ணீராய்!
*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...