22 Oct 2016

ஏ.டி.எம்


வரிசை
கால்கடுக்க டாஸ்மாக்கில் நின்று சரக்கு வாங்கி, "இந்தா சார்!" என்று அதைக் கேட்டவரிடம் கொடுத்து விட்டு, அவர் தந்த எக்ஸ்ட்ரா இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு, மீண்டும் சரக்கு வாங்க, மீண்டும் வரிசையில் நிற்க ஆரம்பித்தான் அதையே தொழிலாக ஆக்கிக் கொண்ட முருகன்.
*****

.டி.எம்
"எத்தனைமுறைதான்மா உனக்கு ஏ.டி.எம்.ல பணம் எடுக்கக் கத்துக் கொடுக்குறது?" சலித்துக் கொண்ட அருண், பணம் எடுத்த பின் பல்காக அப்படியே வாங்கிக் கொண்டான் அம்மா எனும் ஏ.டி.எம். இயந்திரத்திடமிருந்து!
*****

சிக்கனம்
"எலெக்ட்ரிசிட்டியை வேஸ்ட் பண்ணாதீங்க!" வீட்டில் இருந்த எல்லாருக்கும் டோஸ் கொடுத்து விட்டு, முதல் ஆளாக ஆபீஸ் வந்த ரங்கநாதன் எல்லா பட்டன்களையும் தட்டி விட்டு தன் நாற்காலியில் அமர்ந்தார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...