23 Oct 2016

விலை


அமைதி
"சைலன்ஸ்!" என்றார் பேராசிரியர். ரிங்கிட்டது அவரது செல்போன்!
*****

விலை
ஒரு மூட்டை நெல்லை ரூ. 700/- க்குப் போட்டு விட்டு, 20 கிலோ அரிசிப் பையை ரூ.1100/- க்குத் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தார் விவசாயி வேலுச்சாமி!
*****

தரிசு
அரை அடி நகர்ந்த வரப்பிற்காக கொலை செய்யப்பட்டான் கந்தன். கைதான அழகேசன் பனிரெண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தான்.
பனிரெண்டு ஆண்டுகள் தரிசாக கிடந்த நிலங்கள், பதிமூன்றாவது ஆண்டு ப்ளாட் போடப்பட்டு விற்கப்பட்டன !
*****

No comments:

Post a Comment

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி! இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது? தாய்மொழி வழி...