20 Oct 2016

திருஷ்டி


முடிவில்   
பயணங்களின் முடிவில்
கற்றதும் பெற்றதும்,
நசுங்கிய நத்தைகள்
சிறகொடிந்த
பட்டாம் பூச்சிகள்!
*****

சிறுகுறிப்பு        
உன் சிறப்பின்
சிறுகுறிப்பு
என்னவென்றால்
நிற்கும் போது
பூ
நடக்கும் போது
தென்றல்
நீ!
***
இப்படித்தான்
நீ என
தெளியும் போது
இப்படியல்ல நான்
என்று
குழப்பி விட்டுப் போவாய்
சின்ன குறும்போடும்
செல்ல சிரிப்போடும்!
*****

திருஷ்டி    
சுத்தம்
தூய்மை
சுகாதாரம்
நடுரோட்டில் உடையும்
திருஷ்டிப் பூசணிக்காய்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...