21 Oct 2016

200 லோடு மணல்


200 லோடு மணல்
"நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சுப் போச்சு! என்ன பண்ணலாம்?" என்ற ஊர் நாட்டாமையின் கேள்வியை அடுத்து, அனைவரும் ஒரு மனதாக ஆமோதித்தனர், தங்கள் ஊர் வழியே செல்லும் ஆற்றுக்கு இருநூறு மணல் மணல் அடிக்க!
*****

வீடு திரும்புதல்
முதியோர் இல்லம் சென்ற அப்பத்தா வீட்டுக்கு வந்தாள் ஈமச் சடங்கிற்காக!
*****

விழுதல்
மலையிலிருந்து மனைவியைத் தள்ளி விட்டு, மகிழ்ச்சியோடு அபார்ட்மெண்டுக்கு வந்தவன், லிப்ட் கம்பிகள் அறுந்து விழ விழுந்து கொண்டிருந்தான் பதினாறாவது மாடியிலிருந்து!
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...