23 Oct 2016

தட்டு நிறைய நேசம்


ஆகும் போகும் 
மரத்தை வெட்டிய இடம்
மனிதனுக்கு வீடு ஆகும்
பறவைகளுக்கு வீடு போகும்
*****

தட்டு நிறைய நேசம்
ஒரே தட்டில்
நாம் இருவரும்
உண்ட போது
அதிகமாக
ஊட்டிக் கொண்டோம்
அன்பை!
*****

மாறுதல்
அடித்துக் கொண்டு
கலகம் செய்து
கொன்று போட்டதைப்
பார்த்த கடவுள்
மாறிக் கொண்டார்
மதம்!
*****

No comments:

Post a Comment

காலநிலைகளை எதிர்கொள்ளும் விளைச்சல்!

காலநிலைகளை எதிர்கொள்ளும் விளைச்சல்! நெல் என்பது ஒவ்வோராண்டும் ஒவ்வொரு விதமான காலநிலையில் வளர்கிறது. அதன் தலைமுறைகளில் வெவ்வேறு விதமான காலந...