21 Oct 2016

மாட்டுதல்


மாட்டுதல்
பறவை போல்
பறந்து
ஏதோ ஒன்றில்
மாட்டிக் கொண்டது
காற்றில் பறந்த
பாலிதீன் பை!
*****

அடையாளம்     
படம் வரைந்து
பாகம் குறித்த பின்
அடையாளம் மறந்து போனது
நிஜ செம்பருத்தி!
*****

ஆட்டம்     
ஏற்கனவே
ஆடிக் கொண்டு செல்லும்
கிராமத்துப் பேருந்தை
இன்னும்
ஆட்டிக் கொண்டு செல்கிறது
ஒலிக்கும்
குத்துப்பாட்டு!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...