18 Oct 2016

ப்ளீஸ்


ப்ளீஸ்
அறிவுரைகளைக் கேட்டு அரண்டுப் போயிருந்த அமலனுக்கு "யாருக்கும் அட்வைஸ் பண்ணாதீங்கன்னு அட்வைஸ் பண்ணணும்" என்று கத்த வேண்டும் போலிருந்தது!
*****

ஆசை
ஒவ்வொரு முறையும் மன்னரைப் பாட வந்த புலவருக்கு ஒரு முறையாவது அந்தப்புரத்தை நேரில் பார்த்து விட வேண்டும் என்று அடிமனதில் ஆசை!
*****

சாவு
"லாரி அடிச்சிட்டுப் போயிடுச்சு!" என்ற குரல் வந்த திசையை நோக்கி, "ரவியா? குமாரா? முத்துவா?" என்று எல்லாரும் பரபரப்பாக ஓட, பரிதாபமாக அங்கே செத்துக் கிடந்தது மணல் அள்ளப்பட்ட ஆறு!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...