பழக்கம்
தாள் தின்னப் பழகி விட்ட மாடு
தின்று விட்டுப் போகிறது
ஆபாச சுவரொட்டியை!
*****
புண்ணியம்
பத்து கிலோ புண்ணியம்
பத்து ரூபாய்க்குக்
கிடைத்தும்
இருந்த பத்து ரூபாயை
பிச்சைக்காரி ஒருத்தியின்
கைக்குழந்தைக்குப்
பால் வாங்க
கொடுத்து விட்டுப்
போய் விட்டார்
அந்த வழியே
வந்து போன கடவுள்!
*****
பயண அனுபவம்
இருவருக்கும் பொதுவான
கைதாங்கிக் கொண்ட
பயணங்களில்
இருவரில் எவருக்கு
அது என்பதிலே
முடிந்து போகின்றன
பயணங்களின் சுவாரசியங்கள்!
*****
No comments:
Post a Comment