16 Oct 2016

காலப்பெருவெளி


காலப்பெருவெளி     
காலப்பெருவெளியின் சுழற்சியில்
ஏதோ ஒரு பிறவியில்
துப்பாக்கியில் சுட்ட
கோட்சே
பிறக்கக் கூடும்
இன்னொரு பிறவியில்
காந்தியாய்த்
துப்பாக்கியால் சுடப்பட!
*****

தருதல்       
உன் வனளயலில்
போடும் வட்டத்திற்காக
காம்பஸை மறந்து
வரும் நாட்களில்
நீ
வளையலைத் தருவாய்!
நான்
உன்னில் தொடங்கி
உன்னில் முடியும்
வட்டங்களை வரைவேன்!
*****

கண்கள்     
பிரம்மனைப் போல்
நான்கு தலைகள்
முருகனைப் போல்
ஆறு தலைகள்
இராவணனைப் போல்
பத்து தலைகள்
போதுமா
ஒரு தலையில் இருக்கும்
இரு கண்களால்
உன்னைப் பார்க்கும்
எனக்கு?!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...