13 Oct 2016

மண்ணின் மைந்தன்

மண்ணின் மைந்தன்
            மண்ணின் மைந்தனுக்குப் பாராட்டு விழா! பொட்டு மணல் இல்லாமல் ஊரையே அள்ளி உலையில் போட்ட அம்மைந்தனை இறந்த பின் எந்த மண்ணில் புதைப்பது என்று தெரியாமல் ஊரே அல்லோலகலப்பட்டது!
*****

கல்மிஷம்
            "லாபத்துல போய்கிட்டு இருக்கிற கம்பெனியை நஷ்டத்துல ஏன் காட்டணும்?" என்ற கேள்விக்கு, "அப்போ எப்படி ஆட்களைக் குறைக்கிறது?" என்று கல்மிஷமாய்க் கண் சிமிட்டினார் முதலாளி!
*****

புட்டி          
            அழுத குழந்தைக்காக பீடிங் பாட்டிலைத் தேடிக் கொண்டிருந்தளா புவனா!     "இந்தா!" என்று கால மதுப்பாட்டிலில் நிப்பிளைச் செருகி நீட்டினான் புருசன் புண்ணியமூர்த்தி!
*****

2 comments:

  1. குரும்புகள் சேர்ந்து..
    கரும்பாய் இனிக்கிறது..கவிதைகள்..

    ReplyDelete
  2. குரும்புகள் சேர்ந்து..
    கரும்பாய் இனிக்கிறது..கவிதைகள்..

    ReplyDelete

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...