காதல் என்பதும் காதலி என்பவளும்!
வால்வாய் இருந்த
வாழ்வை
டிரான்சிஸ்டராய்ச் சுருக்கியவளே!
டிரான்சிஸ்டராய் இருந்த
மனதை
பிரஸாஸராய்ப் பெருக்கியவளே!
காட்சி பல கண்ட
கண்களை
கேமராவாய் முடுக்கியவளே!
கணினியாய் இருந்த
என்னை
ஸ்மார்ட்போனாய் அடக்கியவளே!
காதல் என்பது
மாய மந்திரமா?
மயக்கும் தந்திரமா?
மர்ம எந்திரமா?
கனவுகளின் மரமா?
தேவதைகளின் வரமா?
*****
முழுப் பார்வைக்கு...
உன்னை முழுமையாய்ப்
பார்க்க
அம்மனைப் போல்
வேண்டும்
ஆயிரம் கண்கள்!
*****
No comments:
Post a Comment