சாமர்த்தியப் பொழுதுகள்
மரம்
நடு மரம் நடு என்கிறாயே
ஏ காட்டை
அழித்த கபோதி
நீ நட்டு
வைத்தா
இவ்வளவு
மரம் வளர்ந்திருக்கிறது
நீ போட்டு
வைத்த காங்கிரீட்டால்
ஒரு
மரம் கூட
முளை
விடாமல் போயிருக்கிறது
*
புதிய
வாடிக்கையாளர் வந்து விட்டார் என்றா
கறியும்
கூட்டும் பொறியலும்
கூடுதலாக
வைக்கிறாய் கடைக்காரா
நாளை
அவர் பழைய வாடிக்கையாளர் ஆகும் போது
இன்று
கூடுதலாக வைத்ததை
கணக்குப்
பண்ணிக் குறைத்துக் கொள்வாய்
*
மிக
சாமர்த்தியமாக
நடந்து
கொள்ளும் மனிதர்கள்
ஒவ்வொருவரும்
அய்யோவென
ஏமாந்து போகிறார்கள்
மிக
மோசமாக ஏமாந்து போகத்தான்
மிக
சாமர்த்தியமாக நடந்து கொண்டார்களோ
*
பத்து
கவிதைகள் எழுத வேண்டும் என்கிற பேராசை
பலமில்லை
உறங்கி
விட்டேன்
கனவில்
வண்ண
வண்ண கவிதைகள்
எழுதுவதற்கு
யாருமில்லை
*****
No comments:
Post a Comment