கவித்துவம்
மரபுக்
கவிதை
ஓரடிக்கு
நான்கு வார்த்தை
நவீனக்
கவிதை
ஓரடிக்கு
ஒரு வார்த்தை
*****
பஞ்ச தந்திரம்
ரேஷன்
அரிசி
இலவசமாகக்
கிடைக்கும் போதே
தோசைமாவின்
விலையை
ஏற்றி
விட்டார்கள்
*****
கடி
கொசுவைக்
கொன்று போட்டது
என்னைக்
கடித்துக் கொண்டிருந்தது
என்பதற்காகவும்
கூடுதலாக
என்னையே
கடித்துக் கொண்டிருந்தது
என்பதற்காகவும்
*****
உயிரின் கடைசிச் சொட்டு
அதற்கு
மேல் பணமில்லை என்பதை
அறிந்தோ
என்னவோ
குளுக்கோஸ்
புட்டியின்
கடைசிச்
சொட்டில் பிரிந்தது
ஆயாவின்
உயிர்
*****
No comments:
Post a Comment