15 Jul 2025

மனிதர்கள் தோற்பது தத்துவங்களின் தலைவிதியாகாது!

மனிதர்கள் தோற்பது தத்துவங்களின் தலைவிதியாகாது!

நான் எப்படிப்பட்ட தலைமுறை தெரியுமா

என்பவரிடம்

உன் தாத்தாவின் அப்பா பெயரை மட்டும் சொல் என்கிறேன்

ஒருவருக்கு நல்லது இன்னொருவருக்குக் கெட்டது

ஒருவருக்குக் கெட்டது இன்னொருவருக்கு நல்லது

உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியானது

உன்னுடைய உலகையே எல்லாருக்குள்ளும் ஊற்றாதே

இலவசமாக ஒன்றைத் தந்து

உன்னை வாங்குகிறார்கள்

பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது

பணமில்லாவிட்டால் எதையும் வாங்க முடியாது

வாங்குவதற்கும் விற்பதற்கும் வழியில்லை என்றால்

பணத்திற்குத் தேவையே இருக்காது

வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் எவ்வளவோ இருக்கின்றன

மனிதர்கள் தோற்பது தத்துவங்களின் தலைவிதியாகாது

தலைவிதிகளை மாற்றி எழுதும் தத்துவங்கள்

கொழுப்பில் என்ன நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பும்

ஒத்துக் கொண்டால் நல்லது

ஒத்துக் கொள்ளா விட்டால் கெட்டது

எளிதாக அவமதித்து விடலாம்

அதைத் திரும்பத் துடைப்பதுதான் கடினம்

எளிதில் ஒருவர் முகத்தில் காறி உமிழ்ந்து விடலாம்

மீண்டும் அந்த எச்சில் உருவாக்கிய அவமானத்தைப்

பிடுங்கி எறிவதுதான் கடினம்

எத்தனையோ

செத்துப் போன

இனி

சாகப் போகும்

மனிதர்களின் வரிசையில்

நீயும் ஒருவன்

*****

No comments:

Post a Comment