காட்டுத்தீப் போல பரவும் பேச்சு
நடுரோட்டில்
உலாத்திக் கொண்டு
தெருவோரத்தில்
துயில் கொள்ளும்
நாய்க்கு
நான்கு குட்டிகள் பிறந்தன
அழகான
குட்டிகள் இரண்டு
அசிங்கமான
குட்டிகள் இரண்டு
நான்காவது
நாளில்
அழகான
குட்டிகள் இரண்டும் காணாமல் போயின
அசிங்கமான
குட்டிகள் இரண்டும்
தாய்ப்பால்
குடித்துக் கொண்டிருந்தன
காட்டுத்தீ
போலப் பரவிய செய்தி கேட்டு
அழகான
குட்டிகள் இரண்டும்
அதிர்ஷ்டம்
செய்தவை என்று பேசிக் கொண்டனர்
தாய்ப்பால்
குடிக்க
அசிங்கமாய்ப்
பிறக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் போல
என்பதைப்
பற்றி யாரும் எதுவும் பேசவில்லை
*****
No comments:
Post a Comment