கூகுளுக்கு மெமரி லாஸ் வருமா?
விவசாயத்துக்காக
அம்மாவிடம்
வாங்கிய பணத்தை
அப்பா
எப்போதும் திருப்பித் தந்ததே இல்லை
திருப்பித்
தரவும் விவசாயம் அனுமதித்தது இல்லை
ஸோ ஸ்வீட்
விவசாயம்
*****
அலைபேசியைப்
பிடுங்கினால்
கை ஒடிந்து
விடுபவர்கள் இருக்கிறார்கள்
எலும்புகள்
அவ்வளவு பலகீனம்
கால்சிய
மாத்திரைகள்
காலாவதியாகி
விடும்
*****
நீ தேடுவதை
உன்னுடன் சேர்ந்து
கூகுளும்
தேடுகிறது
நீ மறந்தாலும்
நீ தேடுவதை
கூகுள்
மறக்காது
மெமரி
லாஸ்
மனிதருக்குத்தான்
வரும்
கூகுளுக்கு
வராது
*****
தேய்க்க
தேய்க்க
தேய்த்துக்
கொண்டிருக்கிறது
கிரெடிட்
கார்டு
செய்கூலி
சேதாரம் தனி
*****
நீ அதை
எவ்வளவு
நேசிக்கிறாயோ
அதுவும்
உன்னை
அவ்வளவு
நேசிக்கும்
உன்
கடன்
டோன்ட்
மிஸ் யூ
*****
ஐந்து
நிமிட
டைட்டில்
கார்டுகளைப் பார்க்க
தில்
இருந்தால்
இரண்டரை
மணி நேர
திரைப்படத்தைத்
தாராளமாகப் பார்க்கலாம்
*****
அந்தப்
பிரச்சனை எப்போதும்
அங்கேதான்
இருக்கிறது
ஒரு
மரணம்
ஓர்
அழுகை
ஒரு
வார்த்தை
ஏதேனும்
ஒன்று
அதை
மாற்றலாம்
அதுவரை
அது
அங்கேதான்
இருக்கும்
அதுவரை
நாம்
அதை
பேசிக் கொண்டிருக்கலாம்
*****
No comments:
Post a Comment