16 Nov 2024

மட்டையான மட்டைப் பந்து!

மட்டையான மட்டைப் பந்து!

நூற்று இருபது பந்துகள் விளையாடத் தெரிந்த அளவுக்கு

ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரியாது

அல்லது

ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரிந்த அளவுக்கு

நூற்று இருபது பந்துகள் விளையாடத் தெரியாது

அல்லது

ஒரு நாள் போட்டி விளையாடத் தெரிந்த அளவுக்கு

ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரியாது

அல்லது

ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரிந்த அளவுக்கு

ஒரு நாள் போட்டி விளையாடத் தெரியாது

எப்போது எதுவிளையாடத் தெரியும்

எது விளையாடத் தெரியாது என்பது

விளையாடுபவர்களுக்கும் தெரியாது

விளையாட்டை

வெட்டித்தனமானய் வெறித்தனமாய்

நோக்கும் ரசிர்களுக்கும் தெரியாது

ஒன்று பரிதாபமாகத் தோற்பார்கள்

அல்லது பிரமாதமாக வெற்றி பெறுவார்கள்

எதுவென்று தெரிகிறதா

இதுவென்று புரிகிறதா

அதுவன்றோ இந்திய மட்டைப் பந்து அணி

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...