மன்னார்குடி கோபாலர் எண்ணெய் ஆலையின் திருவிளையாடல்!
மன்னார்குடிக்கு ‘கோபாலர்
எண்ணெய் ஆலை’ எனும் கோபாலர் ஆயில் மில்லும் சிறப்பு பெற்றதுதான். எண்ணெய் ஆலை எனும்
ஆயில் மில்லை நடத்துவதற்கான அத்தனை கொழுப்பும் அவர்களுக்கே உரியது.
எள்ளை என்ன விலைக்கு எடுத்துக்
கொள்வீர்கள்? என்றால் எள்ளை எடுத்து வா விலை சொல்கிறேன் என்பார்கள்.
தங்கத்தை உரசிப் பார்த்துச்
சொல்லும் காலத்தில், இவர்கள் எள்ளைக் கண்ணால் பார்த்தே விலை சொல்வார்கள்.
எள்ளை எடுத்துக் கொண்டு போய்
விலை கட்டாது என்று திரும்ப எடுத்துக் கொண்டா வர முடியும்? அவர்கள் கேட்கும் குறைந்த
விலைக்குக் கொடுத்து விட்டுதான் வர வேண்டியிருக்கும்.
ரொம்ப யோக்கியர்கள் மாதிரி
பேசுகின்ற கோபாலர் எண்ணெய் ஆலை எனும் கோபாலர் ஆயில் மில்லின் உரிமையாளர்கள் எண்ணெயிலும்
கலப்படம் செய்கிறார்கள்.
அவர்களிடம் வாங்கி வந்த தேங்காய்
எண்ணெய் மார்கழி மாதத்தில் உறைந்ததே இல்லை. சரக்கை அரைக்கும் போதே கலக்க வேண்டியதைக்
கலந்து விடுவார்கள் போலிருக்கிறது.
அவர்கள் என்னவோ ராஜாங்கம்
நடத்துவதாகத்தான் படுகிறது. வாடிக்கையாளர்களை மதித்து அவர்கள் பதில் சொல்லி பார்த்ததில்லை.
அப்படி ஓர் அலட்சியம். அதனால் பக்கத்தில் எண்ணெய் ஆலை வைத்திருக்கும் கேசிஆர் எண்ணெய்
ஆலை எனும் கேசிஆர் ஆயில் மில்லுக்கு நல்ல யோகம். கோபாலரைக் கண்டு மிரண்டு ஓடுவோருக்கெல்லாம்
கேசிஆர்தான் அடைக்கலம்.
கோபாலரின் இன்னொரு மகாத்மியத்தையும்
சொல்ல வேண்டும். காலையில் அரைக்கச் சென்றால், மதியம் அரைக்க வந்தால் என்ன என்பார்கள்.
சரிதான் மதியம் எடுத்துச் செல்வோம் என்று சென்றால் காலையிலேயே அரைக்க வந்தால் என்ன
என்பார்கள்.
இவற்றிற்கெல்லாம் என்ன சொல்ல
முடியும். ஒன்றும் சொல்ல முடியாது. இவை எல்லாம் மன்னார்குடி கோபாலர் ஆடும் திருவிளையாடல்கள்
என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். இப்போது கோபாலர் சில நேரங்களில் எண்ணெய் ஆட்டிக்
கொண்டிருக்கிறார். பல நேரங்களில் ஈயை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
*****
No comments:
Post a Comment