நாட்டில் வாழும் வீட்டில் வளரும் வரிக்குதிரைகள்!
சம்பளத்துக்கு
வரி
சேமிப்பதற்கு
வரி
நிரந்தர
வைப்புக்கு வரி
பணம்
எடுத்தால் போட்டால் வரி
கடையில்
வாங்கும் பொருட்களுக்கு வரி
வரி
கட்டுவதற்கும் வரி
வரி
தாமதத்துக்கும் வரி
பண பரிவர்த்தனைக்கு
வரி
கடன்
வாங்குவதற்கும் வரி
கடனைத்
திருப்பிச் செலுத்துவதற்கும் வரி
இப்படி
வரி கொடுத்துக் கொண்டிருந்தால்
லோக்கல்
ஏரியா ரௌடிகளுக்கு எப்படி மாமூல் கொடுப்பது?
இது
உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதிக்காதா?
இப்படி
நீங்கள் யோசிக்கலாம்.
என்ன
செய்வது?
இப்போதெல்லாம்
ஆயிரம் ரூபாய் மளிகை சாமான் வாங்கினால்
150
ரூபாய் வரியை நீங்கள் செலுத்தித்தான் ஆக வேண்டும்.
வெறும்
பன்னைத் தின்பவர்கள்
கிரீம்
கேக்குக்கு ஆசைப்பட்டால் வரி கட்டித்தான் ஆக வேண்டும்.
புத்தர்
பிறந்த தேசத்தில் ஆசைதான் துன்பத்திற்குக் காரணமல்லவா!
வரிக்குதிரைகள்
காட்டில் மட்டும்தான் இருக்கிறதா என்ன?
எதற்கெடுத்தாலும்
வரி கட்டும் நாமும்
நாட்டில்
வாழும் வீட்டில் வளரும் ஒருவகை வரிக்குதிரைகள்தானே!
*****
No comments:
Post a Comment