ஒரு புதிய திசையில் ஓட நினைக்கிறேன்
எந்த திசையில் ஓடுவது
இருக்கும் திசைகள் அனைத்தும்
பழையது
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
தென்கிழக்கு வடமேற்கு
வடகிழக்கு தென்மேற்கு
வேறென்ன புதிய திசைகள்
இருக்கும் பழைய திசையொன்றில்
ஓடத் தொடங்குகிறேன்
ஓட்டத்தின் வேகமும்
ஓடும் போது உண்டாகும் மனோபாவமும்
ஒரு புதிய திசையை உண்டாக்குகிறது
புதிய திசையில் புதுப்புது
பாதைகள் தெரிகின்றன
ஓட்டத்தின் வேகம் அதிகமாகிறது
மனோபாவம் புதுப்புது திசைகளைக் கண்டுபிடிக்கிறது
No comments:
Post a Comment