விழா
ரங்காவின் நூற்றாண்டு விழா
இந்தத் தேசத்திற்காகவும்
மண்ணிற்காகவும் எவ்வளவு உழைத்திருக்கிறார்
ஏரி குளம் என்று போடப்பட்ட
பிளாட்டுகளில்
முக்கால்வாசி அவர் போட்டது
பல லேக் வியூ அபார்ட்மெண்டுகளில்
அவரது ஆத்மா சாந்தியடைகிறது
அம்ரா நதி வண்ணக்கழிவுகளால்
ஓடிக் கொண்டிருக்கும் அளவுக்கு
தொழிற்புரட்சியை ஆகா ஓகோவென்று
நடாத்திக் (நடத்தியல்ல) காட்டியவர்
தலைவரிடம் நூற்றாண்டு விழா
அனுமதி கேட்க போன போது
அவன் யார்
அவனுக்கென்ன விழா என்றார்
காரியாலயத்தில் ரங்காவின்
புகைப்படம் இருப்பதைச் சொன்னதும்
அதைப் பேசிக் கொண்டு வருபவர்களைத்
தெருநாயைத் துரத்தியடிப்பதைப்
போல விரட்டியடிக்கச் சொன்னார்
ரங்காவின் நூற்றாண்டு இப்படியாக
அவரது குடும்பத்தாருக்கே
தெரியாமல் போனது
தலைவரது பிறந்த நாள் கோலாகலமாகக்
கொண்டாடப்பட்டதைப் பார்த்த போது
ரங்காவின் இடத்தைத் தலைவர்
பிடித்து விட்ட பிறகு
ரங்காவுக்கென்ன விழா
*****
No comments:
Post a Comment