20 Feb 2023

வள்ளல்களின் தேடல்

வள்ளல்களின் தேடல்

எதுவும் தரப் பிரியப்படாத நீ

வள்ளலெனப் புகழப்பட வேண்டுமென்ற

ஆசையில் இருந்தாய்

புகழுக்கெனச் செலவு செய்யவும் பிரியமாய் இருந்தாய்

புலவர்களைக் கூட்டி வந்தாய்

பாடகர்களை அழைத்து வந்தாய்

இசைப்பவர்களை இழுத்து வந்தாய்

நாட்டியக்கார்களைக் கொண்டு வந்தாய்

புலவர்கள் இட்டு கட்ட

பாடகர்கள் ராகம் கூட்ட

இசைப்பவர்கள் சுதி சேர்க்க

நாட்டியக்காரர்களின் சலங்கை தெறிக்க

ஒரே நாளில் வள்ளல் என ஆனாய்

யாருக்கும் கொடுக்காமலா

பாடல் பிறந்திருக்கும் என்ற நம்பிக்கையில்

இன்றும் வள்ளல் எனப் பாடப்படுகிறாய் நீ

அந்தக் கலைஞர்கள் போன திசையை

இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் வள்ளல்கள்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...